சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 250 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பயணம் செய்யக்கூடிய மக்களிடம் மத்திய ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே காவல் துறையினர் இணைந்து விழிப்புணர்வு மேற்கொண்டனர். ரயிலில் பயணம் செய்பவர்கள் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது எனவும், சென்ட்ரல் ரயில் நிலையம்,எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பயணிகளின் உடைமைகள் பரிசோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்டல் டிடெக்டர் வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், 6 செக்வே இ-ஸ்கூட்டர் வாகனங்களை கொண்டு காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 250 காவலர்கள் பாதுகாப்பு பணியில் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post