வந்தவாசியை சுற்றியுள்ள கிராமங்களில் திடீரென மழை பெய்ததால், வெயிலால் வாடியிருந்த விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சுற்றியுள்ள மருதாடு, கீர்கொடுங்காளூர், பொன்னூர், இளங்காடு, மும்முனி, வெண்குன்றம், தெள்ளூர் உள்ளிட்ட பல கிராமங்களில் திடீரென கனமழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Discussion about this post