தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மம்சாபுரம், வன்னியம்பட்டி, கிருஷ்ணன் கோயில், மல்லி, கூமாப்பட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணிநேரம் கனமழை நீடித்தது.
இதேபோன்று, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சத்திரப்பட்டி, சேத்தூர், தளவாய்புரம், கிருஷ்ணாபுரம், சமுசிகாபுரம் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கியது.
புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரை மணிநேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் அங்கு குளுமையான சூழல் நிலவியது.
Discussion about this post