வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கில் சுழற்சியால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார். உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என புவியரசன் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post