நீலகிரி, கோவை உள்ளிட்ட மலை மாவட்டங்களில் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை உள்ளிட்ட மலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
இந்நிலையில்நீலகிரியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக அனைத்து மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 25ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளதாக தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மேலும், 5 நாட்களுக்கு மழை தொடரும் என்பதாலும்,நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.