வடகிழக்கு மாநிலமான அசாமில் கனமழை காரணமாக 15 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்குள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை இன்னும் தீவிரமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், அங்குள்ள நிலமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக மாநில அரசிடம் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
இதனிடையே பார்பேடா மாவட்டம் அதிக சேதங்களை சந்தித்துள்ளதாகவும், அந்த மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post