வெப்பச்சலனம் காரணமாக கோவை உட்பட 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, தேனி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடனும், அதன் பிறகு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post