ஸ்ரீவில்லிபுதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஃபானி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்று வீசும் எனவும், ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுதூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம், மல்லி, கிருஷ்ணன்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Discussion about this post