கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 114-ஆக உயர்ந்துள்ளது.
பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளை இழந்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 114-பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் இரண்டாவது முறையாக மீண்டும் கடும் சேதத்தை சந்தித்து வருகிறது. இதுவரை, 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 57 பேர் பலியாகி உள்ள நிலையில், ஒன்றரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வயநாடு பகுதியில் உள்ள பாணாசுர சாகர் அணை நிரம்பியதை தொடர்ந்து மதகுகள் திறந்து நீர் வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்ததை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
Discussion about this post