மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை முதல் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரையில் மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தென்மேற்கு பருவக்காற்று சாதகமாக வீசும் நிலை உருவாவதால், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘வால்பாறை, நடுவட்டம், தேவாலாவில் தலா 3 சென்டிமீட்டரும், சோலையாறு, சின்கோனா, செங்கோட்டையில் தலா 2 சென்டிமீட்டரும், சின்னக்கல்லாறு, குளச்சலில் தலா ஒரு சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது என தெரிவித்துள்ளது.
Discussion about this post