விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் ஒருவாரமாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில் சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக காற்றுடன் கூடிய மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளின் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.இந்த மழையால் பணகுடி,பழுவூர்,காவல்கிணறு, வடக்கன்குளம், கள்ளிகுளம், போன்ற பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரைமணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது.வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த பொது மக்கள் இதனால் மகிழ்ச்சியடைந்தனர்.
Discussion about this post