உத்தரபிரதேச மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
வட இந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதன் காரணமாக, கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் ழூழ்கி உள்ளன. நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 15 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆயிரக்கனக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வாராணசியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்த போது, திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் வாரணசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்புப் படையைச் சேர்ந்த வீரர் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.