நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்தாததால் ஊட்டி மலைப் பகுதிகளில் வறட்சி நிலவி வந்தது. இதனால் பொதுமக்களும், வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் திடீரென்று ஊட்டியில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கமர்சியல் சாலை, புளுமவுண்ட்டன் உள்ளிட்ட நகர் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் திடீரென மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. கடந்த மூன்று தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் பெய்த கனமழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக திண்டுக்கல்லில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மாலை திடீரென்று பலத்த மழை பெய்தது . மேலும் இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Discussion about this post