திண்டுக்கல்லில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் நிலவிய குளிர்ச்சியான சூழலால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல்லில் காலையில் இருந்தே வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில் மாலையில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. மாலையில் கருமேகங்கள் ஒன்று கூடி மெதுவாக சாரல் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது. மீண்டும் அரைமணி நேரம் கழித்து கனமழை கொட்டியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Discussion about this post