திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில், திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல், நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த புளியங்குடி மற்றும் வாசுதேவ நல்லூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்தநிலையில் அப்பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு நேரத்தில் கூமாப்பட்டி, வத்திரா யிருப்பு, சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல், தேனி மாவட்டம் போடி மற்றும் தேவாரம், ராசிங்காபுரம், முந்தல், குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. இந்தநிலையில் தேனி மாவட்ட விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து முன் கூட்டியே பயிர்களை விதைத்தனர். தொடர் மழை விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post