விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, கனமழையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கீழ்பேரடிகுப்பம் கிராமத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, ஏரியின் மதகு உடைந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து அப்பகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த ஆய்வின் போது, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினார்.
Discussion about this post