யானைகள் கூட்டம் ஒன்று இறந்து போன குட்டியைத் தூக்கிக் கொண்டு இறுதி ஊர்வலம் சென்ற நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் எடுத்த வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதில், யானை ஒன்று இறந்து போன குட்டியை துதிக்கையால் தூக்கியபடி சாலையைக் கடந்து நிற்கிறது. சில நொடிகள் கண்ணீருடன் காத்திருந்த வேளையில் அதன் பின்னால் மேலும் சில யானைகள் வந்து சாலையில் குழுமி நின்றன.
இறுதியாக இறந்த குட்டியைத் தூக்கிக் கொண்டு வனத்திற்குள் செல்கின்றன. சிம்பன்ஸி, கொரில்லா போன்ற உயிரினங்களைத் தவிர்த்து யானைகளும் இறுதி ஊர்வலம் சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரவீன் கஸ்வான் தெரிவித்துள்ளார்.
Discussion about this post