உடல் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்க விளையாட்டு அவசியம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு அகில இந்திய குடிமைப்பணி மற்றும் மத்தியப் பணி அலுவலர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. சென்னை மெரினா விளையாட்டு மைத்தானத்தில் நடைபெறும் போட்டிகளை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச, முதலமைச்சர் பந்தை அடித்து தொடங்கி வைத்தார். பின்னர் 6 அணிகளை சேர்ந்த அணி தலைவர்கள் மற்றும் வீரர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடல் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்க விளையாட்டு அவசியம் என்று கூறினார். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் போன்ற பணிகளில் இருப்பவர்கள் மன புத்துணர்ச்சிக்காக விளையாட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post