கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள வடமாநில இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா பாதித்த வடமாநில இளைஞருடன் தொடர்பில் இருந்த 10 பேரை இரவோடு இரவாக கண்டுபிடித்து தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக கூறினார். இனி, உள்நாட்டு விமான நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post