ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது.
90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு, வரும் 21-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஹரியானா மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். ஹரியானாவில், தற்பொழுது பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
Discussion about this post