உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக இந்தியாவை சேர்ந்தவரை நியமிக்க வேண்டும் என கடந்த ஆண்டு, தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பு ஒரு மனதாக முடிவு செய்தது. இந்த நிலையில், 34 பேரை உறுப்பினராக கொண்டுள்ள உலக சுகாதார நிறுவத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பொறுப்பேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தாம் பதவியேற்றுள்ள சூழலில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகமே நெருக்கடியில் இருப்பதை நன்கு அறிவதாக கூறினார். இன்னும் 20 ஆண்டுகளுக்கு சுகாதாரம் சார்ந்த பல்வேறு சவால்கள் காத்திருப்பதாகவும், அனைவரின் முறையான பங்களிப்பால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும் என்றும் ஹர்ஷ்வர்தன் கூறினார்.
Discussion about this post