நடிகர் ஹரீஷ் கல்யாண் 2010ம் ஆண்டு முதல் சிந்து சமவெளி, சட்டப்படி குற்றம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கான அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை. பின்பு 2011ம் ஆண்டு வெளியான பொறியாளன் திரைப்படத்தில் மக்களிடம் வரவேற்பை பெற்றார்.
அதன்பின் பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.அந்தப் போட்டியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் திரைத்துறையில் அவர் வெற்றி பெற்று விட்டார் என்றுதான் கூற வேண்டும்.அதன்பின் பியார் பிரேமா காதல், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் ஆகிய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார்.
தற்போது ’தனுசு ராசி நேயர்களே’ என்ற காமெடி திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று ரஜினிகாந்தை ’தனசு ராசி நேயர்களே’ படக்குழு சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
இவர்களின் இந்த சந்திப்பை ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .அதில் ஒரே சந்திரன், ஒரே சூரியன் ஒரே சூப்பர் ஸ்டார்..எனது வாழ்நாள் முழுவதும் நேசிக்க வேண்டிய தருணம் இது’ என்று கூறி ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஒரே சந்திரன் ஒரே சூரியன் ஒரே சூப்பர்ஸ்டார். தலைவரிடம் ஆசி பெற்றபோது ! A moment to be cherished for the remaining of my life. Thank you @rajinikanth sir. @isanjaybharathi @devarajulu29 #santhanabharathi sir. #DhanusuRaasiNeyargalae pic.twitter.com/IWQ2dNjD0n
— Harish kalyan (@iamharishkalyan) November 26, 2019
Discussion about this post