பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பண்டியா நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்த தன் காதல் விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார். நடாஷா ஸ்டான்கோவிக் என்ற செர்பிய நாட்டை சேர்ந்த நடிகையை தான் ஹர்திக் பண்டியா காதலித்து வருகிறார்.
தன் காதலை சரியாக 2020 துவங்கிய உடன் உலகுக்கு அறிவித்து அதிரடி காட்டி இருக்கிறார் அவர். நடாஷா ஸ்டான்கோவிக் தமிழ் படமான அரிமா நம்பி படத்தில் தோன்றி இருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவலாக இருந்தது.
ஹர்திக் பண்டியா கடந்த சில மாதங்களாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டு, பின் அதில் இருந்து மீண்டு வருகிறார்.
தற்போது நடுக்கடலில் சொசுகு படகு ஒன்றில் நடாசாவிடம் மோதிரத்தை பரிசாக கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். இதற்காகவே காத்திருந்தது போல் நாடாசும் உற்சாகமுடன் அதனை ஏற்றுக் கொண்டார். மோதிரத்தை பரிசாக பெற்றுக் கொண்ட பின் நடாசா, ஹர்திக் பாண்டியாவை முத்தமிட்டு தனது காதலை வெளிப்படுத்தினார்.
Discussion about this post