நடிகர் சிம்பு, முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை “மஹா” படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “வாலு” படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ள படம் “மஹா”. பெண்ணை மையமாக வைத்து இயக்குனர் ஜமீல் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். “வாலு” படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்ட போது இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இருவரும் பிரிந்தனர். தற்போது, நான்கு வருடங்களுக்கு பிறகு ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர்.
இந்நிலையில், “மஹா” படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், ஹன்சிகா மோத்வானி மீது மேலே படுத்து தூங்கியபடி நடிகர் சிம்பு காதல் செய்வது போல் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலான “மஹா” போஸ்டரை பார்த்த சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அடுத்த சுற்றுக்கு தலைவர் தயார் ஆகிவிட்டது போல தங்கள் கொண்டாட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Discussion about this post