அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடைமாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அனுமன் ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு ஆயிரத்து எட்டு வடைமாலைகள் சாற்றப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
Discussion about this post