பெண்ணாடத்தில் மாற்றுத்திறனாளி ஆசிரியரால் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை முதன்மை கல்வி அலுவலர் தொடக்கி வைத்து பாராட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மாற்றுத்திறனாளியான ஹேம்குமார். இவர் தனது சொந்த செலவில், Smart Class எனப்படும் நவீன வகுப்பறையை நிறுவியுள்ளார்.
இந்த நவீன வகுப்பறையை, கடலூர் முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அரசு பள்ளி வளர்ச்சி பெறுவதால், மாணவர்கள் விரும்பி கல்வி கற்பார்கள் என்றும், இதன் மூலம் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post