ஜப்பானை ஹகிபிஸ் புயல் தாக்கியதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.
டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பகத்தை சில தினங்களுக்கு முன்பு ஹகிபிஸ் புயல் தாக்கியது. இதனால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. 60 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய புயலாக இது கருதப்படுகிறது. டோக்கியோ, மிய், உள்பட 7 பிராந்தியங்களில் வசிக்கும் 42 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழையால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. புயல் மற்றும் மழையால் பலியானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. பலரை காணவில்லை என்பதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள ஜப்பான் அரசு, நிவாரண பணிகளை மேற்கொள்ள 6.5 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
Discussion about this post