அமெரிக்க அரசின் எச்1பி விசா என்பது, அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கான விசாவாகும். இந்த விசா மூலம் வெளிநாட்டினர் அங்கு நிரந்தரமாக குடியேற முடியாது.
அதன் மூலம் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் மட்டுமே தங்கி பணிபுரிய முடியும். டோனல்ட் டிரம்ப் அதிபராக் பதவி ஏற்ற பின்பு எச்1பி விசாவுக்கான கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டன.
அதன் மூலம் எச்1பி விசாவுக்கான காலம் வெகுவாக குறைக்கப்பட்டது. அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்களை இந்தியர்கள் நடத்தி வருகின்றனர்.
எச்1பி விசா மூலம் ஏராளமான இந்தியர்கள், சீனர்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிகின்றனர். எச்1பி விசா கட்டுப்பாட்டினால் ஐடி நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஐடி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் வழக்கு தொடர்ந்தன. விசா வழங்கும் அதிகாரத்தை தொழிலாளர் துறைக்கு வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைக்க வலியுறுத்தி இரண்டாவது முறையாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.