மழை நேரத்தில் வீணாகும் நீரை சேமிப்பதற்காக புதிய முயற்சி எடுத்து வெற்றிக் கண்டுள்ள குணராமநல்லூர் ஊராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் குணராமநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மழை நீரை சேகரிக்க, மழை காலங்களில் வீணாகும் நீரை சேமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அருகில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களில் மழை பெய்யும் நேரத்தில் ஒரு பைப் லைன் அமைத்து தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
மழைநீர் சுத்திகரிக்கப்பட்டு, மூன்று வகை சுத்திகரிப்பு மூலம் மழைநீர் கிணற்றில் சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் நீரை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பொது மக்களுக்காக ஊராட்சி அலுவலகம் இந்த திட்டத்தை கொண்டு வந்து, அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post