கும்மிடிப்பூண்டியில் அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து, 9 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள் வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையை பூட்டி சென்ற நிலையில், மறுநாள் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையில் இருந்த 9 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் மது பாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல்துறையினர், மதுபான கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர்.
Discussion about this post