பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குஜராத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், தனியார் பேருந்து சேவைக்கு தடை விதிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குஜராத் மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக வேலைநிறுத்த போராட்டத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்துகள் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post