வரும் 5ஆம் தேதி யோகா மையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் திறந்தவெளியில் உள்ள உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குறைந்தது 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும். பொதுவெளியில் எச்சில் துப்பக்கூடாது என்றும் வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முடிந்த அளவு உடற்பயிற்சிக் கூடங்களில் உள்ள உபகரணங்களை சமுக இடைவெளிக்கு ஏற்ப மாற்றி அமைக்கவும், குறைந்த அளவில் சுழற்சி முறையில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உடற்பயிற்சி கூடங்களில் உள்ள அனைத்து உபகரணங்களின் அருகே கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post