கூடலூர் நகராட்சி நிர்வாகம் ரூ.1.25 கோடியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு செலுத்த ஆணை

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் 1.25 கோடி ரூபாய் வைப்புத்தொகை செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் தினசரி 15 டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, சலிவயல் என்ற பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இதை கடந்த 1996-ஆம் ஆண்டு நகராட்சித் தலைவராக பதவிவகித்த திமுக பிரமுகர், தடுத்து நிறுத்தினார். இதனால் கூடலூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும், குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரச் சீர்கெடு தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அதிமுக கவுன்சிலர் சாய்பிரியா சந்திரசேகர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் பல்வேறு இடங்களில் கொட்டப்படும் குப்பைகள் புன்னம்புழா ஆற்றில் கலப்பதால், குடிநீர் மாசு ஏற்படும் நிலை உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் கூடலூர் நகராட்சி வைப்புத் தொகையாக ரூபாய் 1.25 கோடி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு செலுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version