புதிய இடம்பெயர்வு விதிகளில் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் குவாத்தமாலா கையெழுத்திட்டுள்ளதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு புகழிடம் தேடி வருபவர்களுக்கு முதலில் குவாத்தமாலா அடைக்கலம் தர வேண்டும் என்ற புதிய ஒப்பந்தத்தில் அந்நாட்டு ஜனாதிபதி ஜிம்மி கையெழுத்திட்டார். புதிய இடம்பெயர்வு விதிகளில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு குவாத்தமாலா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு பெரிய அனாதை இல்லமாக மாறப்போவதாகவும், டிரம்ப் ஒரு துரோகி என்ற பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரம்பிற்கு இது பாதுகாப்பான நாடு இல்லை என்றும், ஒப்பந்தத்தின் மூலம் ஏராளமானோர் விவசாய தொழிலாளர்களாக அமெரிக்காவிற்கு செல்ல வாய்ப்புள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.