சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரிவிலக்கு உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு இன்று கூடுகிறது.
ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் ஈட்டும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ் பிரதாப் சுக்லா தலைமையில் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகர்கள் குழு விவாதிக்க இருக்கிறது. பேரிடர் நல நிதிக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பான ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சரவைக் குழுவும் இன்று கூடுவதாக கூறப்படுகிறது. கேரள வெள்ளப் பேரிடருக்கு வழங்கப்பட்ட நிதிக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படுகிறது.
Discussion about this post