கடந்த ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் 1 கோடியே 2 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாத வசூலை விட 5 புள்ளி 8 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஜூன் மாதத்தில் வரி வசூல், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது. இந்தநிலையில், ஜூலை மாதத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக 17 ஆயிரத்து 912 கோடி ரூபாயும், மாநில வரியாக 25 ஆயிரத்து 8 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி 50 ஆயிரத்து 612 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளது.
இதில் இறக்குமதியின் போது வசூலிக்கப்பட்டது, 24 ஆயிரத்து 246 கோடி ரூபாயாகும். கூடுதல் வரியாக, 8 ஆயிரத்து 551 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக ஜூலை மாத ஜி.எஸ்.டி வரி வசூல் 1 கோடியே 2 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை வசூலான மொத்த ஜி.எஸ்.டி. வரி 4 லட்சத்து 16 ஆயிரத்து 176 கோடி ரூபாயாகும். கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 568 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post