இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, ஜி.எஸ்.டி வரி மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து, கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், நாட்டின் உள்கட்டமைப்புகளில் அதிகம் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட மற்றும் குறுகிய கால வளர்ச்சி திட்டங்கள் சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.
தொழில்துறையினருடன் மத்திய அரசு எப்போதும் தொடர்பில் இருக்க விரும்புகிறது என்று கூறிய அவர், வரி நிர்வாகத்தை பொறுத்த வரை புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி வரியை குறைக்க மாநில அரசுகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,2025ஆம் நிதியாண்டிற்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கை எட்ட பட்ஜெட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இனி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, ஜி.எஸ்.டி வரி மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post