ஜி.எஸ்.டி பற்றிய புதிய அறிவிப்புகள், சந்தேகங்களை விளக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சியில் ஜி.எஸ்.டி ஆலோசகர்கள் பங்கேற்ற மாநில முகவரி மாநாடு நடைபெற்றது. இதில் 12 ஆயிரம் ஜிஎஸ்டி ஆலோசகர்களின் முழு விவரம் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. 6 மாத காலமாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது முதற்கட்டமாக 6 ஆயிரம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதம் மாவட்ட வாரியாக இந்தப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும். ஆலோசகர்களின் விவரங்கள் மட்டுமின்றி, ஜிஎஸ்டி தொடர்பான அனைத்து சந்தேகங்களை தீர்க்கும் விதமாக இந்த புத்தகம் இருக்கும் என்று மத்திய கலால் ஆணையர் கென்னடி தெரிவித்தார்.
Discussion about this post