சந்திராயன் – 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.எல்.வி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர் பேசிய அவர், ஜி.எஸ்.எல்.வி வெற்றிகரமாக ஏவப்பட்ட அனைத்து பெருமையும் விஞ்ஞானிகளை சாரும் என்றும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை அனுப்பும் திறனை இந்தியா பெற்றுவிட்டது எனவும் தெரிவித்தார்.
ஜிஎஸ்எல்வி மார்க் -3 டி2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்றும் தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த இந்த செயற்கை கோள், பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலை நிறுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும், ஜம்மு – காஷ்மீர் மற்றும் வடகிழக்கு இந்தியா பகுதிகளில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்த இந்த செயற்கைகோள் உதவும் என்றும் 2020ல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் சாத்தியமாகும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
Discussion about this post