தகவல் தொடர்பு சேவைகளுக்கான இந்தியாவின் ஜிசாட்-31 செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து நாளை ஏவப்பட உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில், 40வது செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிசாட் – 31 என்ற இந்த செயற்கைக்கோள், பிரான்ஸ் நாட்டின், பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் – 5 ராக்கெட் மூலம் ஏவப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, இந்த செயற்கைக்கோள் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 2,535 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், உள்நாட்டில் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமல்லாது நாட்டை சுற்றியுள்ள பெருங்கடல்கள் குறித்த தகவல்களையும் அளிக்கும். இதன் ஆயுட்காலம், 15 ஆண்டுகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post