வேதாரண்யத்தில் இரண்டாம் போக கோடை கால நிலக்கடலை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளான செம்போடை, தேத்தாகுடி, கத்தரிபுலம், நாகக்குடையான் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலையை கோடை காலங்களில் இரண்டாம் போகமாக விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
குருவை, ஜெ. எல் குஜராத் போன்ற ரகங்களை தேர்வு செய்து 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். முதல் போகத்தில் நல்ல லாபம் ஈட்டியதாகவும், இரண்டாம் போகமாக சாகுபடியை தொடங்கியுள்ளதாகவும் கூறும் விவசாயிகள், வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் நல்ல விலை கொடுத்து வாங்கி செல்வதாக தெரிவித்துள்ளனர்.
Discussion about this post