நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் வனப் பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன.
போதிய மழைப் பொழிவு இல்லாமல் கடந்த 5 மாதங்களாக நீலகிரி வனப் பகுதிகளில் வறட்சி நிலவியது. இதனால் வனவிலங்குகள் நீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்ததால் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மீண்டும் பசுமை திரும்பியுள்ளது. இதனால் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வறட்சி காரணமாக வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருந்த விலங்குகளும் மீண்டும் வனப்பகுதிக்குள் வந்துள்ளன.
Discussion about this post