கன்னியாகுமரி அருகே வனப்பகுதியில் கடந்த ஆண்டை விட அதிகளவில் பச்சை நிற வண்ணத்துப் பூச்சிகள் வருகை தந்துள்ளதால் அவ்வழியாக செல்பவர்கள் அதனை மிகவும் கண்டு ரசித்து செல்கின்றனர்.
தடிக்காரன்கோணம், கொத்தளம் பள்ளம், கீரிப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக பறந்து வருகிறது. பச்சை வண்ணம் கொண்ட வண்ணத்துப் பூச்சிகள் சாலையோரங்களில் இருப்பது செடிகள் படர்ந்துள்ளதை போல காட்சி தருகிறது. இதனை அப்பகுதியில் இருக்கும் மக்கள் வெகுவாக ரசிப்பதோடு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான பச்சை நிற வண்ணத்துப்பூச்சிகள் இந்த பகுதிக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.