வேதாரண்யத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர் மீன் வளர்ப்பில் அதிக லாபம் பெற்று வருகிறார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தையடுத்த தென்னம்புலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் டிப்ளமோ படித்துவிட்டு வேலை கிடைக்காததால் தனது சொந்த நிலத்திலேயே மீன் பண்ணை அமைத்துள்ளார். அந்த பண்ணையில் கட்லா, ரோகு, விறால் உள்ளிட்ட மீன்களை வளர்த்து அவற்றை விற்பதன் மூலமாக அதிக லாபம் பெற்று வருகிறார்.
இது குறித்து பேசிய அவர் தான் 4 லட்ச ரூபாய் செலவில் மீன் பண்ணை அமைத்ததாகவும் இதன் மூலமாக தனக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தனது மீன்வளர்ப்பு குளத்தைச் சுற்றி தோட்டம் ஒன்றையும் அமைத்து காய்கறிகளை பயிர் செய்து வருகிறார்.
Discussion about this post