மருத்துவ கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி கண்காணிக்குமாறு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் தலைமையில் பொது மருத்துவ கழிவுகள் சுத்திகரிப்பு நிலைய அமைப்பாளர்கள் மற்றும் அகில இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் மருத்துவ கழிவுகளை உரிய நேரத்தில் சேகரித்து, மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின்படி சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மருத்துவ கழிவுகளை சுத்திகரிக்க பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிறுவனங்களால் விதிக்கப்படும் கட்டண விகிதங்களை சீராக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
Discussion about this post