மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் சேய் நலத்திட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியதற்காக தமிழக சுகாதாரத்துறைக்கு “எக்ஸ்பிரஸ் பப்ளிக் ஹெல்த்” என்ற தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட விருதை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறைக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். நோய் தொற்றுகளை கண்டறிய அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு
முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.