சென்னையில் தனியார் குழுமத்தின் சார்பில், நடமாடும் மருத்துவ மையத்தை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.
சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துமனையில் நடைபெற்ற, நடமாடும் மருத்துவ மைய தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக ஆளுநர், இன்றைய சூழலில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பவை தொற்றா நோய்கள்தான் என்று கூறினார். இந்த நடமாடும் மருத்துவ மையத்தின் மூலம், அனைத்து இடத்திற்கும் சென்று மருத்துவ சேவை வழங்கப்படுகிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 50 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றார்.
Discussion about this post