தமிழகம், ஆந்திரா, உத்திரபிரதேசம், பீகாரைச் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள், துபாய் நாட்டின் சார்ஜாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். கொரோனா ஊரடங்கினால் வேலையிழந்த அவர்கள், கடந்த 5 மாதங்களாக சம்பளம் இல்லை எனவும், ஊதியம் கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும், வேலை பார்த்த இடத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அடுத்த வேளை உணவுக்கே வழியின்றி தவிப்பதால், தங்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லக் கோரி, 47 தொழிலாளர்கள் வாட்ஸ்ஆப் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post