தேசிய வருவாய்வழி திறனறிவுத் தேர்வில் சத்தியமங்கலம் அருகே உள்ள கோடேபாளையம் அரசுப்பள்ளி மாணவர் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் 8 ம் வகுப்பு மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வருவதற்கும், அவர்களின் இடைநிற்றலை தடுக்கவும் கல்வி உதவித்தொகையுடன் கூடிய கல்வி வழங்குவதற்கு மத்திய அரசு நிதியுதவியுடன் மாநில அரசு நடத்தும் என்எம்எம்எஸ் எனும் தேசிய வருவாய் வழி திறனறிவுப் போட்டி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் சத்தியமங்கலம் அடுத்த கோடேபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர் சக்திவேல் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
Discussion about this post