மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள தனக்கன்குளத்தில் ஏழ்மை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் இசை ஆசிரியர் பெரியசாமி. இவர் மதுரை ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் இசை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சுமார் 15 ஆண்டுகளாக இசை ஆசிரியராக பணிபுரிந்து வரும் பெரியசாமி மாணவ மாணவிகளுக்கு தான் படித்த இசை உபயோகப்படும் வகையிலும், தமிழ் பற்றினை வளர்க்கும் வகையிலும் திருக்குறள்,சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என தமிழ் இலக்கியங்களை மெட்டுக்கள் போட்டு பாடல்களாக உருவாக்கியுள்ளார்.
மேலும் இந்த பாடல்கள் அனைத்தையும் குறுந்தகடுகளில் பதிவேற்றம் செய்து அதனை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி வருகிறார். இது பள்ளி மாணவ மாணவிகளின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி டெங்கு விழிப்புணர்வு பாடல்கள் சமூக விழிப்புணர்வு பாடல்கள் போன்ற பாடல்களையும் பாடியுள்ளார். செய்யுளை இசையுடன் படிக்கும் போது, எளிமையாக மனப்பாடம் செய்ய முடியும் என இசை ஆசிரியர் பெரியசாமி கூறுகிறார்…
படிப்புச்சுமையை குறைத்து, பாடங்களை மகிழ்ச்சியாக படிக்க அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற இசை , நடனம் போன்ற கலை ஆசிரியர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது அல்லவா…
Discussion about this post